மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

நூதன முறையில் தங்கம் கடத்தல்!

நூதன முறையில் தங்கம் கடத்தல்!

சென்னை விமான நிலையத்தில், ரூ.65.7 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் (சார்ஜா )இருந்து சிறப்பு விமானம் ஒன்று நேற்று வந்தது. அங்கு விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜா முகமது (42) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்துள்ளனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் ரூ.13 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போன்கள், டிஜிட்டல் கைக்கடிகாரங்கள், சிகரெட்டுகள் இருந்தன. பின்னர் ராஜா முகமதை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.52 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 120 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

அவரிடம் இருந்து மொத்தம் ரூ.65 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், செல்போன்கள், கைக்கடிகாரங்கள், சிகரெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக ராஜா முகமதுவிடம் இரவு முழுவதும் விசாரணை மேற்கொண்டனர்.

அவரை சோதனை செய்த போது ராஜா முகமது மலக் குடலில் இருந்து 1.23 கிலோ தங்கப்பசை பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதிலிருந்து 1.12 கிலோ தங்கம் பிரித்தெடுக்கப்பட்டதாகவும் , அவர் காலில் அணிந்து இருந்த காலுறை (சாக்ஸ்) மற்றும் மூட்டு வலிக்கான உறை ஆகியவற்றில் தங்கத்தை தூளாக்கி பொட்டலங்களாக மறைத்து வைத்து கடத்தி வந்ததாகவும் விமான நிலையத்தில் அதிகாரிகள் சூசுகமாக தெரிவித்துள்ளனர்.

ராஜாமுகமது கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது, 7 ஐபோன் 12 ப்ரோ, 12 ஏர்பாட்ஸ் ப்ரோ, 10 ஆப்பிள் கடிகாரங்கள், 12 ஆப்பிள் பவர் அடாப்டர்கள், 6 சாம்சங் கேலக்‌சி கடிகாரங்கள், 4 பெட்டி டன்ஹில் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 65.70லட்சம் என விமானநிலைய சுங்கத்துறை ஆணையகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மார்ச் 9இல் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனால் சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பிஸ்மில்லா கான் (வயது 21), தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஹெப்சி பியூலா (30) இருவரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். பிடிபட்ட பிஸ்மில்லா கான், ஹெப்சி பியூலா ஆகியோரிடம் இருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 870 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து

குறிப்பிடத்தக்கது.

_சக்தி பரமசிவன்

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

வெள்ளி 12 மா 2021