மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

போக்குவரத்து ஊழியர்கள் அரசியல் கட்சிக்கு உதவக் கூடாது!

போக்குவரத்து ஊழியர்கள் அரசியல் கட்சிக்கு உதவக் கூடாது!

அரசு போக்குவரத்து ஊழியர்கள் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவோ, உதவியாகவோ இருக்கக் கூடாது என போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் செய்யும் பணி இன்றிலிருந்து தொடங்குகிறது. இனி, கட்சி விளம்பரங்கள், பிரச்சாரங்கள், கூட்டங்கள் என பணி மும்முரமாக நடக்க தொடங்கும். இந்நிலையில், போக்குவரத்து கழகம் அதன் ஊழியர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அனைத்து பணிமனைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், ”தேர்தலில் ஈடுபடும் போக்குவரத்து ஊழியர்கள், அரசியல் கட்சிக்கு எந்தவொரு உதவியும் செய்யக் கூடாது. தேர்தல் பணியில் இருக்கும் போக்குவரத்து ஊழியர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் செயல்படுவார்கள். தேர்தல் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். வாக்குப்பதிவு நடக்கும் நேரத்திலும், வாக்கு எண்ணிக்கையின்போதும் தேர்தல் அதிகாரிகளுக்கு உதவியாக செயல்பட வேண்டும்.

தேர்தலில் ஈடுபடும் அல்லது ஈடுபடாத போக்குவரத்து ஊழியர்கள், அரசியல் கட்சிகளுக்கு எந்தவித உதவியும், ஆதரவும் தரக் கூடாது. அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து வாக்கு சேகரிக்க செல்லக் கூடாது. தங்களது வாகனம், வீடுகளில் அரசியல் கட்சிகளின் சின்னங்களை வரைய அனுமதிக்கக் கூடாது. வாக்குச்சாவடி முகவர் பணியிலும் ஈடுபடக் கூடாது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் ஊழியர்கள் மீது தேர்தல் விதி எண் 134-ன்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

வெள்ளி 12 மா 2021