மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

கிச்சன் கீர்த்தனா: வாழையிலை ஃபிஷ் ஃப்ரை!

கிச்சன் கீர்த்தனா: வாழையிலை ஃபிஷ் ஃப்ரை!

மத்தி, சங்கரா போன்ற ஒமேகா-3 அதிகம் உள்ள மீன்களில் இருந்து மீன் வாடை அதிகம் வருவதாலும், அவற்றில் முள் அதிகம் உள்ள காரணத்தாலும் பெரும்பாலானோர் அவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த வாழையிலை ஃபிஷ் ஃப்ரை செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள். இன்னும் கொஞ்சம் கேட்பார்கள்.

மீனை பொரிக்க...

நெய் மீன் அல்லது வஞ்ஜர மீன் - 200 கிராம்

லெமன் ஜூஸ் - சிறிது

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு, சோம்புத்தூள், மஞ்சள் தூள் - தலா கால் டீஸ்பூன்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

கிரேவி செய்ய...

பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா அரை கப்

தக்காளி சாஸ் - கால் கப்

பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - இரண்டு டீஸ்பூன்

எண்ணெய் - இரண்டரை டீஸ்பூன்

கடுகு, வெந்தயம் - சிறிதளவு

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

வாழையிலையில் வைத்து மடிக்க...

பெரிய வாழையிலை - ஒன்று

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - இரண்டு

இஞ்சி - பூண்டு - இரண்டு டீஸ்பூன்

எண்ணெய் - சிறிதளவு

எப்படிச் செய்வது?

மீனைப் பொரிக்க கொடுத்த பொருட்களை கலந்து சுத்தம் செய்த மீனில் புரட்டி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மொறு மொறுவென்று பொரிக்கத் தேவையில்லை. கிரேவிக்கு கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, வெந்தயம் தாளித்து இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி தக்காளி சாஸ், உப்பு, மிளகாய்த்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கவும். வாழையிலையை தீயில் வாட்டிக் கொள்ளவும். பின் இலையின் மேல் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கிரேவியை வைத்து அதன் மேல் மீனை வைத்து மீனின் மேல் கிரேவி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு வைத்து இலையை நன்றாக மடித்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு வாைழ இலையுடன் கூடிய மீனை வைத்து மூடி போட்டு இருபுறமும் பிரவுன் கலர் வரும் வரை மிதமான தீயில் சுட்டெடுக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: கணவாய் மீன் வறுவல்!

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வெள்ளி 12 மா 2021