மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

மூக்கை உடைத்த உணவு டெலிவரி ஆள்: வைரலாகும் வீடியோ!

மூக்கை உடைத்த உணவு டெலிவரி ஆள்: வைரலாகும் வீடியோ!

‘உணவு டெலிவரி பாய் என் மூக்கை உடைத்துவிட்டார்’ என ரத்தம் வழிய வழிய சமூக வலைதளத்தில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

பெங்களூருவைச் சேர்ந்தவர் ஹிட்டேஷா சந்திரனே அழகுக்கலை நிபுணராகப் பணியாற்றி வருகிறார். அவர் மார்ச் 9ஆம் தேதி ஜொமோட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால், உணவு வருவதற்கு தாமதமானதாகத் தெரிகிறது. இதனால் ஆர்டரை ரத்து செய்யுமாறு ஜொமோட்டோ கஸ்டமர் கேரிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அந்த நேரத்தில் உணவு டெலிவரி பையன் வீட்டு வாசலுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும் சந்திரனேவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் உணவு டெலிவரி ஆள் அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது

இதுகுறித்து சந்திரனே தனது சமூக வலைதளத்தில், “உணவு தாமதம் ஆனதும் மீண்டும் எடுத்துச் செல்லுமாறு கூறினேன். அவர் முடியாது என்று என்னைப் பார்த்து கோபமாக கத்தத் தொடங்கினார். அத்துமீறி என் வீட்டுக்குள் நுழைந்தார். என் பாதுகாப்புக்காக செருப்பைக் கையில் எடுத்தேன். அவர் என் முகத்தில் குத்தினார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதில் கூறியுள்ள டெலிவரி ஆள் காமராஜ், “ஹிட்டேஷா சந்திரனே என்னை செருப்பால் தாக்க முயற்சி செய்தார். நான் தற்காப்புக்காக தடுத்தேன். அவர் கதவில் மோதி காயமடைந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு புகார்களையும் ஏற்றுக்கொண்டுள்ள ஜொமோட்டோ, இதுகுறித்து போலீஸார் உதவியுடன் விரிவாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது போல எதிர்காலத்தில் நடக்காது எனவும் உறுதி அளித்துள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 11 மா 2021