மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

கரை ஒதுங்கிய ஏலக்காய் மூட்டைகள்... காரணம் என்ன?

கரை ஒதுங்கிய ஏலக்காய் மூட்டைகள்... காரணம் என்ன?

வேதாரண்யம் அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான ஏலக்காய் மூட்டைகள் கரை ஒதுங்கியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மணியன் தீவு கடற்கரைக்கு தெற்கே முனங்காடு கடற்கரை பகுதியில் இரண்டு மூட்டைகள் கரை ஒதுங்கி கிடந்தன. இதை பார்த்த மீனவர்கள், இதுகுறித்து கடலோரக் காவல் குழும போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் கடலோரக் காவல் குழும போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இரண்டு மூட்டைகளையும் பிரித்துப் பார்த்தனர். அதில் ஏலக்காய் இருந்தது தெரியவந்தது. இரண்டு மூட்டைகளிலும் மொத்தம் 100 கிலோ ஏலக்காய் இருந்தது. இதை தொடர்ந்து போலீசார், ஏலக்காய் மூட்டைகளை போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். இதன் மதிப்பு கிட்டதட்ட ரூ.2 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றபோது படகில் இருந்து தவறி விழுந்ததா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், “கடந்த வாரம் சென்னையில் இருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காக ஆம்புலன்ஸில் கடத்தி வந்த 28 கிலோ கஞ்சா பிடிபட்டது. இதேபோல் தொடர்ந்து வேதாரண்யம் பகுதியில் இருந்து கஞ்சா, ஏலக்காய், மஞ்சள் கடத்தி செல்வதும், இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வருவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

தற்போது சட்டசபை தேர்தலையொட்டி பறக்கும்படையினர் சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையும் மீறி கஞ்சா மற்றும் மஞ்சள் உள்ளிட்டவற்றை இங்கிருந்து கடத்தி செல்லப்படுகிறது. இதைத் தடுக்க போலீஸார், உளவுத்துறையினர், கடலோரக் காவல்துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜ்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வியாழன் 11 மா 2021