மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

மாணவிகளுக்கு கொரோனா: பள்ளிக்கு விடுமுறை!

மாணவிகளுக்கு கொரோனா: பள்ளிக்கு விடுமுறை!

திருவாரூரில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 11 மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, பள்ளிக்கு ஏழு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக 11 மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஜனவரியில் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்,12ஆம் வகுப்பு மாணவிகள் பலர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 8ஆம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், ஐந்து பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்கள், விடுதியில் ஒன்றாக தங்கி படிப்பதால், மற்ற மாணவிகளுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மன்னார்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் மன்னார்குடி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பள்ளிக்கு ஏழு நாட்கள் விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதையடுத்து, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மேலும் 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 275 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுத்தேர்வை எழுதவுள்ள 12ஆம் வகுப்பைத் தவிர்த்து ஏற்கனவே தேர்ச்சியளிக்கப்பட்ட 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வினிதா

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

வியாழன் 11 மா 2021