மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

ஆதார் அடிப்படையில் வாக்காளர் பட்டியல்: மறுத்த உயர் நீதிமன்றம்!

ஆதார் அடிப்படையில் வாக்காளர் பட்டியல்: மறுத்த உயர் நீதிமன்றம்!

ஆதார் விவரங்களின் அடிப்படையில் புதிய வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்தியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், குடிமக்களின் அடையாளத்திற்காக வழங்கப்படும் பயோமெட்ரிக் ஆதார் அட்டை இருக்கும்போது, வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டியதன் அவசியமென்ன?

வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடர்பான முகாம்கள் குறித்து தேர்தல் ஆணையம் முறையாக விளம்பரங்கள் வெளியிடுவதில்லை. ஆளும் கட்சியைச் சேராத தகுதியான வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்குவதற்காகவே வாக்காளர் பட்டியல் திருத்தம் முகாம் நடத்தப்படுகிறது. லட்சக்கணக்கான வாக்காளர்களிடம், வாக்காளர் அடையாள அட்டை இல்லை. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி என்ற பெயரில் மக்களின் பணம்தான் வீணடிக்கப்படுகிறது.

பழைய நடைமுறையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தேவையற்றது. எனவே, தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஆதார் அட்டையிலுள்ள விவரங்களின் அடிப்படையில் புதிய வாக்காளர் பட்டியலை தயாரிக்க உத்தரவிட வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களுக்கு, ஆதார் அட்டை வைத்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று(மார்ச் 11) தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அப்போது, தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்தல் நடைமுறைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த கோரிக்கைகள் தற்போதைய நிலையில் தொடர்பில்லாதவை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது. வேண்டுமென்றால், அடுத்த பொது தேர்தலுக்கு முன் இதுபோன்ற கோரிக்கையுடன் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 11 மா 2021