மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள மாநிலம்?

பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள மாநிலம்?

இந்தியாவில் நான்கு லட்சத்துக்கும் அதிகமான பிச்சைக்காரர்கள் இருப்பதாகவும், நாட்டிலேயே மேற்குவங்கத்தில்தான் அதிகளவிலான பிச்சைக்காரர்கள் இருப்பதாகவும் மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பிச்சைக்காரர்கள் குறித்து மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், நாட்டில் மொத்தம் 4 லட்சத்து 13 ஆயிரத்து 670 பிச்சைக்காரர்கள் உள்ளனர். அதில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 673 ஆண்கள் மற்றும் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 673 பெண்கள் உள்ளனர்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மேற்குவங்கத்தில் 81 ஆயிரத்து 224 பிச்சைக்காரர்களும், இரண்டாம் இடத்தில் இருக்கும் உத்தரப்பிரதேசத்தில் 65 ஆயிரத்து 835 பேரும், மூன்றாம் இடத்தில் இருக்கும் ஆந்திராவில் 29 ஆயிரத்து 723 பேரும், நான்காம் இடத்தில் இருக்கும் பீகாரில் 28 ஆயிரத்து 695 பேரும் உள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் 28,695 பேரும், ராஜஸ்தானில் 25,853 பேரும், டெல்லியில் 2,187 பேரும், சண்டிகரில் 121 பேரும், தாத்ரா நாகர் ஹாவேலி 19 பேரும், டாமன் மற்றும் டையூவில் 22 பேரும், அந்தமான் நிகோபர் தீவுகளில் 56 பேரும் பிச்சைக்காரர்களாக இருக்கின்றனர்.

குறைந்தபட்சமாக லட்சத்தீவில் 2 பேர் மட்டுமே பிச்சைகாரர்களாக உள்ளனர். 2011 ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வியாழன் 11 மா 2021