மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

திருச்செந்தூரில்  ஓராண்டுக்குப் பிறகு தங்கத்தேர்  உலா!

திருச்செந்தூரில்  ஓராண்டுக்குப் பிறகு தங்கத்தேர்  உலா!

முருக கடவுளின் அறுபடை கோயில்களில் ஒன்றான திருச்செந்தூரில்  ஓராண்டுக்குப் பிறகு தங்கத்தேர்  கிரி வீதி உலா மார்ச் 10ஆம் தேதி தொடங்கியது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கொரோனா பொது ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 20ஆம் தேதி முதல்  சுவாமி தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.  

கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால் தங்கத்தேர் கிரிவீதி உலா நடைபெறாமல் இருந்தது.

ஓராண்டுக்குப் பிறகு நேற்று முதல் திருக்கோயிலில் தங்க தேர் கிரிவீதி உலா தொடங்கியது.ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர் .  திருச்செந்துார் மூலவருக்கு ரூ.55 லட்சத்தில் தங்ககிரீடம் பக்தர் ஒருவரால் வழங்கப்பட்டது.

ஈரோட்டைச் சேர்ந்த தினேஷ் கிருஷ்ணன் குடும்பத்தினர்  திருச்செந்துார் மூலவருக்கு அணிவிப்பதற்காக ரூ.55 லட்சம் மதிப்புள்ள 1350 கிராம் எடை கொண்ட இந்த தங்ககிரீடத்தை வழங்கினர். கோயில் நிர்வாகம் பெற்றுக்கொண்டு சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு பூஜைவழிபாடு நடந்தது.

-சக்தி பரமசிவன்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வியாழன் 11 மா 2021