மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

திடீர் மழையால் குளுகுளுவான குற்றாலம் !

திடீர் மழையால் குளுகுளுவான குற்றாலம் !

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நேற்று இரவு முதல் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில், மெயின் அருவி,ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் இன்று (மார்ச் 11) பகலில் வாட்டி எடுத்த வெயிலுக்கு இதமாக குளித்து சென்றனர்.

காலை 6 மணியில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அதிகளவில் வந்தனர். இன்று மஹாசிவராத்திரி என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். குற்றாலநாதர் கோயிலிலும் வழிபாடு செய்து சென்றனர். ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவியில் தண்ணீர் விழுந்ததால் அங்கும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.

தேனி மாவட்டம் சுருளி அருவி வனப்பகுதியில் திடீரென்று நேற்று பெய்த மழை யால் அருவியில் இன்று நீர்வரத்து ஏற்பட்டது. கடந்த மார்ச் 3ஆம் தேதி சுருளி அருவிக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் குறைந்தது. கடும் வெயிலால் அருவிக்கு நீர்வரத்து தரும் அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை நீர் ஊற்று ஓடைகள் வறண்டது.

இந்நிலையில் நேற்றிரவு திடீரென்று , மேற்கு மலை தொடர்ச்சி , கம்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கோடைமழைபெய்தது. இதனால் பகல் முழுவதும் கடும் வெயிலால் அவதியடைந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மழையால் சுருளி அருவிக்கு நீர்வரத்து தரும் வனப்பகுதிகளில் உள்ள நீரூற்றுகளில், நீர்வரத்து ஏற்பட்டு, இன்று அதிகாலை முதல் அருவியில் தண்ணீர் கொட்டியது. தற்போதைய நிலையில், கொரோனா தொற்று பரவலால் அருவியில் குளிக்கத் தடை இருப்பதால் இங்கு மக்கள் குளிக்கமுடியாத ஏக்கத்துடன் உள்ளனர்.

தென்மாவட்டங்களில் பலத்த வெயில் வாட்டி எடுத்த நிலையில் புதன்கிழமை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி,குமரி மற்றும் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தியதால் மக்கள் கோடை காலத்தில் குளிர்ச்சி யடைந்துள்ளனர்.

-சக்தி பரமசிவன்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வியாழன் 11 மா 2021