rதமிழகம்: 118 தொகுதிகளில் அதிக பணப்பட்டுவாடா!

public

தமிழகத்தில் 118 தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்படும் ரொக்கப்பணம் ,தங்க வெள்ளி நகைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், 118 தொகுதிகளில் அதிக அளவில் பணப்பட்டுவாடா நடைபெற வாய்ப்பு உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் என 5 மாநிலங்களைப் பொறுத்தவரை மொத்தமாக 272 தொகுதிகளில் பணப்பட்டுவாடா அதிகம் நடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதிகளைக் கண்காணிக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஆர்கே நகர் தேர்தல் மற்றும் 2019ஆம் ஆண்டு வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலின் போது நடத்தப்பட்ட ஆய்வு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த கணக்கீடு செய்யப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *