மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

நடையும், ஓட்டமுமாக சிவனை தரிசிக்கும் பக்தர்கள்!

நடையும், ஓட்டமுமாக சிவனை தரிசிக்கும் பக்தர்கள்!

உலகம் முழுவதுமுள்ள இந்துக்கள் பிரதான விழாவாக மஹர சங்கராந்தி, தீபாவளி, பொங்கல் வைகுண்ட ஏகாதசி என பண்டிகையை கொண்டாடுவது போல் சிவனுக்கு உகந்த மாசி தேய்பிறை சிவராத்திரி திதியை சிவபக்தர்கள் மஹா சிவராத்திரியாக கொண்டாடுகின்றனர்.

இன்று மஹாசிவராத்திரி கொண்டாடப்படுவதையொட்டி குமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று ஓடிச் சென்றே வழிபடும் வரலாற்று சிறப்புமிக்க ‘சிவாலய ஓட்டம்’ முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து நேற்று (மார்ச் 10) துவங்கியது.

குமரி மாவட்டத்தில் 110 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த ‘சிவாலய ஓட்டம்’ பிரசித்தி பெற்றது. சிவராத்திரியையொட்டி காவி வேட்டி, காவித்துண்டு, ருத்ராட்சம் அணிந்து, வெறுங்காலுடன் சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு, பனை ஓலை விசிறியுடன் இந்த ஓட்டத்தை சிவ பக்தர்கள் துவக்கினர். இது, பார்க்க பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

முன்சிறை திருமலை மகாதேவர் கோவில், திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோவில், திருபன்னிபாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு சிவன்கோவில், திருபன்றிகோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில் ஆகியவை அந்த 12 சிவாலயங்களை பக்தர்கள் மஹா சிவராத்திரியில் வணங்குவது சிறப்பாகும்

12 சிவாலயங்களில் முதல் ஆலயமான முன்சிறை என்ற திருமலையில் இருந்து இந்த ஓட்டம் துவங்கி12ஆவது ஆலயமான திருநட்டாலம் ஆலயத்தை தரிசிக்கும் வரை சிவ நாமத்தை உச்சரித்தபடியே இந்த ஓட்டம் நடைபெறும்.. மஹாசிவராத்திரி இன்று நடைபெறுவதையொட்டி குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டத்திற்காக குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநில பக்தர்கள் கடந்த 7 நாட்களுக்கு முன்னர் விரதத்தை தொடங்கினர்.

நேற்று மாலை முதல் திருத்தலமாகிய முன்சிறை சிவன் கோவிலில் சிவ பக்தர்கள் வந்து அங்கு புனித நீராடி காவி துண்டுகள் அணிந்து சுவாமி தரிசனம் செய்து கையில் விசிறி உடன் புறப்பட்டனர்.

இன்று (மார்ச் 11) இரவு முழுவதும் தொடர்ந்து 12 சிவாலயங்களுக்கு பக்தர்கள் கால்நடையாக நடந்தும், ஓடியும் தரிசனம் செய்வார்கள். ஓட்டத்தின் போது ‘ஹர ஹர மஹாதேவ’ என்று சரணம் கோஷம் எழுப்பி ஒவ்வொரு கோவிலாக சென்று 12ஆவது ஆலயமான திருநட்டாலம் ஆலயத்தில் தங்களது நேர்த்திக் கடனை நிறைவு செய்வார்கள். முன்பெல்லாம் 12 சிவாலயங்களை ஓட்டமும் நடையுமாய் சென்று வழிபட்ட பக்தர்கள் இப்போது முதுமை கால்வலி போன்ற காரணங்களால் பலர் இரு சக்கர வாகனங்கள், வேன், ஆட்டோ, பஸ்களிலும் பயணம் செய்து 12 சிவாலயங்களையும் வழிபட்டு இரவு கண் விழித்து மஹாசிவராத்திரியில் சிவனுக்கு நேர்ச்சை செலுத்துகிறார்கள்.

-சக்தி பரமசிவன்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வியாழன் 11 மா 2021