மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

திருவிழாவில் மோதல்: 144 தடை உத்தரவு!

திருவிழாவில் மோதல்: 144 தடை உத்தரவு!

லால்குடி அருகேயுள்ள அன்பில் பகுதியில் கோயில் திருவிழாவின்போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 7 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள அன்பில் கிராமத்தில் ஆச்சிராமவல்லியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி திருவிழா பிரசித்தி பெற்றது. திருவிழாவின்போது சாமி சிலையை ஊர்வலமாக கொண்டு செல்வதில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 1994 ஆம் ஆண்டு முதல் இங்கு திருவிழா நடைபெறவில்லை. இந்த பிரச்சினை குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டபோது, ஏற்கனவே உள்ள நடைமுறைபடித் திருவிழா நடத்தலாம் என கடந்தாண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி இந்தாண்டு திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது, திருவிழாவின்போது சாமி ஊர்வலம் தங்களது தெருவுக்கும் வர வேண்டும் என மற்றொரு பிரிவைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி திருவிழா நடத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்தது.

இதையடுத்து, கோயில் திருவிழாவில் மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று காலை அங்குள்ள சிவன் கோயிலில் இருந்து அம்மன் சிலையை தூக்கிக் கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் ஆச்சிராமவல்லியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டனர்.அப்போது, திடீரென ஊர்வலத்தில் கல்வீச்சு தாக்குதல் நடந்தது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அம்மன் சிலை ஆச்சிராமவல்லியம்மன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இரு தரப்பு மோதல் ஏற்பட்டதால், மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காத வகையில், ஜக்கமராஜபுரம், கீழன்பில், புறாமங்கலம், கோட்டைமேடு, குறிச்சி, பறித்திகால் ஆகிய கிராமங்களில் மார்ச் 10 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக 17 பேரைப் பிடித்து லால்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வினிதா

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

வியாழன் 11 மா 2021