மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

ரிலாக்ஸ் டைம்: கொள்ளு இனிப்பு உருண்டை!

ரிலாக்ஸ் டைம்: கொள்ளு இனிப்பு உருண்டை!

‘கொழுப்பைக் குறைக்கும் உணவு கொள்ளு’ என்று சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். இது ஓர் ஆரோக்கிய உணவு. ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். இன்று ரிலாக்ஸ் டைமில் கொள்ளு இனிப்பு உருண்டை செய்து சாப்பிடுவோம்.

எப்படிச் செய்வது?

வாணலியில் சிறிதளவு நெய்விட்டு ஒரு கப் கொள்ளை இளம்பதமாக வறுத்து எடுத்து கொள்ளவும். பின் குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். பிறகு, நீரை நன்கு வடித்து அதை ஆறவிடவும். நன்கு ஆறியதும் அதனுடன் முக்கால் கப் பொடித்த வெல்லம், கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் கால் கப் தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கிளறி, நெய் தொட்டு சின்னச்சின்ன உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளலாம். தேவையானபோது பரிமாறவும்.

சிறப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வியாழன் 11 மா 2021