மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஒடுக்கு பூஜை!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஒடுக்கு பூஜை!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் குமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலும் உண்டு. பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படும் இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜை செவ்வாய்க்கிழமை (மார்ச் 9) நள்ளிரவு நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் குடும்பத்துடன் மண்டைக்காட்டின் கடற்கரையோரம், கோயில் வளாகம் மற்றும் அருகிலுள்ள தென்னந்தோப்புகளில் கூடியிருந்தனர். மண்டைக்காடு கடற்கரை மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

மார்ச் 9 அதிகாலை 2 மணிக்கு சாஸ்தான் கோயிலில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நடந்தது. 4.30 மணிக்கு அடியந்திர பூஜையும், காலை 6 மணிக்கு குத்தியோட்டமும், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும் நடந்தபின் இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை தொடங்கியது.

மண்டைக்காடு சாஸ்தான் கோயிலில் இருந்து 21 வகையான உணவு பதார்த்தங்கள் 9 மண் பானைகள் மற்றும் பெட்டிகளில் வைக்கப்பட்டு பூசாரிகளால் கோயிலுக்கு பவனியாகக் கொண்டு வரப்பட்டது. இரண்டு குடம் தேனும் எடுத்து வரப்பட்டது.

அப்போது இவற்றை தலையில் சுமந்து வந்த பூசாரிகள் வாயை சிவப்பு துணியால் கட்டி உணவு பதார்த்தங்கள் வெள்ளைத் துணியால் ஒரே சீராக போர்த்தப்பட்டு ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். இந்த ஒடுக்கு பவனி வரும்போது கோயிலைச் சுற்றி அதிகமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

ஒடுக்கு பவனி கோயிலை ஒருமுறை வலம் வந்ததும் உணவு பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக அம்மன் முன் இறக்கி வைக்கப்பட்டது. பின்னர் குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நள்ளிரவில் ஒடுக்கு பூஜையும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலையில் தமிழகம் கேரளாவைச்சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தியுடன் ஒடுக்கு பிரசாதம் பெற்றுச்சென்றனர்.

-சக்தி பரமசிவன்

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

வியாழன் 11 மா 2021