மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

காலியிடங்களை விரைந்து நிரப்ப உத்தரவு!

காலியிடங்களை விரைந்து நிரப்ப உத்தரவு!

நுகர்வோர் குறைதீர் ஆணையங்களிலுள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சிகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடுத்திருந்தார். அதில், தமிழகத்தில் கடந்த 2020 பிப்ரவரி முதல் காலியாக உள்ள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் பதவிக்கும், திருநெல்வேலி, சேலம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் தவிர, பிற மாவட்டங்களில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் உள்ள காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். 19 மாவட்டங்களில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் நிரந்தர உறுப்பினர்கள் இல்லாததால், வழக்கு தொடரும் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்தி சுகுமார குரூப் அமர்வு, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நேற்று மீண்டும் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அப்போது, நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப நீதிபதி சுப்பையாவை தேர்வுக்குழு தலைவராக உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு நியமித்துள்ளது. அதனால், குழுவிலுள்ள மற்ற உறுப்பினர்களை விரைந்து நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

வினிதா

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

வியாழன் 11 மா 2021