மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 மா 2021

முழு வீச்சில் தேர்தல் பணிகள்!

முழு வீச்சில் தேர்தல் பணிகள்!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை பாதுகாப்பாக நடத்த உறுதி எடுத்துள்ளோம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் தயாரித்த ”தமிழக சட்டமன்றத் தேர்தல் தகவல் கையேட்டை” இன்று(மார்ச் 10) தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டார். இதையடுத்து பேசிய அவர், ”தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதை கவனத்தில் கொண்டு போதுமான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய பாதுகாப்பு படையினரும், போலீசாருடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தேர்தலில் எந்தவித முறைகேடும் நடக்காத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை ரூ.45.55 கோடி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தபால் வாக்கு அளிக்க கால அவகாசம் அளிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து தேர்தல் ஆணையத்துடன் கலந்துலோசிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

தேர்தல் பணிகள்

தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் சுமார் 7,000 பேருக்கு இன்று முதல் தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த தேர்தலில் 1,200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்று அமைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா காரணமாக 1,050 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. இதற்காக 6,000க்கும் அதிகமாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. சென்னையில் மட்டும் 16 தொகுதிகளுக்கும் சேர்த்து 30,000 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படவுஉள்ளனர் என சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

வினிதா

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

4 நிமிட வாசிப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

3 நிமிட வாசிப்பு

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

புதன் 10 மா 2021