மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 மா 2021

மனிதத்தன்மையற்ற செயல்!

மனிதத்தன்மையற்ற செயல்!

மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது மனிதத்தன்மையற்ற செயல் என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

உலகம் நவீனம் அடைந்து வரும் இந்த காலத்திலும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். கழிவுகளை அகற்றும் பணிகளின்போது விசவாயு தாக்குவது, மண் சரிவது உள்ளிட்ட காரணங்களால் அந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது. 1993 ஆம் ஆண்டு முதல் 2020 வரை இந்தியாவில் கழிவுகளை அகற்றும் பணியின் போது மட்டும் 620 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த 620பேரில் 144 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அதன்படி,கழிவுகளை அகற்றும் பணியின்போது விசவாயு தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் சார்பில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் பாதாளச் சாக்கடை, கழிவு நீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்கள் ஈடுபடுவதைத் தடை செய்யவும், பணியின் போது விசவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 10) விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதாளச் சாக்கடைகளிலும், கழிவுநீர் தொட்டிகளிலும் விசவாயு தாக்கி பலியானோரின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த நடைமுறை தொடர்கிறதா? இல்லையா என மாநில அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

மனிதத்தன்மையற்ற இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள் இந்த விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டு வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

-பிரியா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

புதன் 10 மா 2021