மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 மா 2021

தேர்தல் பிரச்சாரம்: சரக்கு வாகனங்களுக்குத் தடை!

தேர்தல் பிரச்சாரம்: சரக்கு வாகனங்களுக்குத் தடை!

தேர்தல் பிரச்சாரத்திற்கு பொது மக்களை சரக்கு வாகனங்களில் அழைத்து வரக் கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் எச்சரித்துள்ளார்.

தேர்தல் வேலைகளில் அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பொதுக்கூட்டம், பிரச்சாரம் எனத் தேர்தல் களம் சூடுபிடிக்கவுள்ளது. வழக்கமாகப் பிரச்சாரத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக அழைத்து வரப்படுவர்.

இந்நிலையில், பொதுக்கூட்டத்திற்கோ அல்லது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கோ பொதுமக்களை அழைத்துவர, அனுமதிக்கப்பட்ட பயணிகள், வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறை ஆணையர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக, இன்று (மார்ச் 10) வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,

"தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பொதுக்கூட்டத்திற்கோ அல்லது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கோ பொதுமக்களை அழைத்துவர, அனுமதிக்கப்பட்ட பயணிகள் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக, சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிவந்தால் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறை மூலம் எடுக்கப்படும்.

*மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 66 (1) மற்றும் பிரிவு 207-ன் கீழ் அனுமதிச் சீட்டு மற்றும் பதிவுச் சான்றை மீறிய குற்றத்திற்காக வாகனம் சிறை பிடிக்கப்படும்.

*மேற்கண்ட குற்றத்திற்காகச் சிறை பிடிக்கப்பட்ட வாகனம் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989, விதி 421-ன் கீழ் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும்.

* மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 192 (A)-ன் கீழ் 6 மாதம் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் ரூ.10 ஆயிரம் நீதிமன்றத்தால் விதிக்கப்படலாம்.

*சிறை பிடிக்கப்பட்ட வாகனங்களின் அனுமதிச் சீட்டை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

*மேலும், உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்புக் குழு உத்தரவின்படி ஓட்டுநரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

எனவே, பொதுமக்களைச் சரக்கு வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றால், மோட்டார் வாகனச் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

-பிரியா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

புதன் 10 மா 2021