மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 மா 2021

திருவிழாவில் தேனீக்கள் கடித்து பலர் மருத்துவமனையில் அனுமதி!

திருவிழாவில் தேனீக்கள் கடித்து பலர் மருத்துவமனையில் அனுமதி!

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே கோவிலில் இன்று (மார்ச் 10) நடைபெற்ற விழாவில் தேனீக்கள் கடித்து 10 குழந்தைகள் உட்பட ஏராளமானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடுமலைபேட்டை அருகே உள்ள பாலப்பட்டியில் காளியம்மன் கோவில் மாசிகொடை விழா நடைபெற்று வருகிறது. இன்று காலையில் அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்தப் பகுதியில் உள்ள தென்னை மரத்தில் இருந்து தேனீக்கள் கலைந்து பறந்து வந்து கோவில் விழாவில் கூடியிருந்த பொதுமக்களை கடிக்கத் தொடங்கியது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்குமிங்குமாக தலைதெறிக்க ஓடினர். பின்னர் சுதாரித்துக் கொண்ட பொதுமக்கள் உடுமலை அரசு மருத்துவமனைக்கு வர தொடங்கினர். ஒரே சமயத்தில் மருத்துவமனை வளாகத்தில் கூடிய குழந்தைகள் பெரியவர்களுக்கு மருத்துவமனையில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட முதியோர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் உடுமலை அரசு மருத்துவமனைக்குவந்தபோது இவர்களோடு நூற்றுக்கணக்கான தேனீக்களும் வந்து அங்கு கூடியிருந்தவர்களை கடிக்கத் தொடங்கியது. இதனால் அரசு மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் பொதுமக்கள் அனைவரும் தலைதெறிக்க சாலைக்கு ஓடி வந்ததாக கூறுகின்றனர் மருத்துவமனையில் இருந்தவர்கள்.

தென்னை மரத்தின் உயரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் கலைந்ததே இந்த சம்பவத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடுமலை பேட்டை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

-சக்தி பரமசிவன்

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

புதன் 10 மா 2021