மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 மா 2021

யானைக்கு தீ: பாய்ந்தது குண்டர் சட்டம்!

யானைக்கு தீ: பாய்ந்தது குண்டர் சட்டம்!

நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் யானைக்கு தீ வைத்த இரண்டு பேர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மசினக்குடி பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஒற்றை ஆண் காட்டுயானை கடந்த ஜனவரி 3ஆம் தேதியன்று மாவனெல்லா பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்குள் புகுந்தது. அப்போது, யானையை துரத்துவதற்கு விடுதி உரிமையாளர் ரேமண்ட் மற்றும் கூலி தொழிலாளி பிரசாத் ஆகிய இருவரும் யானை மீது தீ பற்ற வைத்த துணியை வீசியதில், யானையின் காது பகுதியில் பலத்த காயமடைந்தது. யானை தீ பற்றிய வலியில் பிளிறியபடி ஓடிய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஜனவரி 19ஆம் தேதி யானை உயிரிழந்தது.

இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், விடுதி உரிமையாளர் ரேமண்ட் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்து, குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு கூடலூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விடுதியின் மற்றொரு உரிமையாளரான ரிக்கி ரயான் தற்போது வரை தலைமறைவாகயுள்ளார்.

இந்நிலையில் யானைக்கு தீ வைத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்குமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ”யானைக்கு தீ வைத்தது தொடர்பாக இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இன்று இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்படவுள்ளனர். தலைமறைவாக உள்ள ஒருவரை கைது செய்ய காவல்துறை உதவியை கேட்டுள்ளோம்” என கூறினார்.

வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

புதன் 10 மா 2021