மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 மா 2021

இந்த எண்ணில் புகாரளியுங்கள்!

இந்த எண்ணில் புகாரளியுங்கள்!

தேர்தல் செலவின பார்வையாளர்களைத் தொடர்பு கொள்வதற்கு செல்போன் எண்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டுள்ளார்.

தேர்தல் நெருங்கி வருவதால், அதற்கான முன்னேற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழக தேர்தல் செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அலுவலர் மது மகாஜன், முன்னாள் ஐஆர்எஸ் அலுவலர் பி.ஆர். பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டால்,வேட்பாளர் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் செலவின பார்வையாளர்களின் கண்காணிப்பின் கீழ் வந்துவிடும்.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, செலவின பார்வையாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், வருமான வரி, சுங்கத் துறை, வருவாய் புலனாய்வுத் துறை, மாநில கலால்வரித் துறை, மத்திய ஜிஎஸ்டி மற்றும் கலால் வரித் துறை, காவல்துறை, வங்கித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பொறுப்பு அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.

அப்போது, வங்கி பணபரிவர்த்தனைகளை கண்காணிப்பது, வாக்காளர்களுக்கு பணம், பரிசுபொருட்கள் உள்ளிட்டவை விநியோகிக்கப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பேசியபோது, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினரின் தேர்தல் செலவினங்களை பார்வையிடவும், கண்காணிக்கவும் உள்ளனர். தேர்தல் செலவினங்கள் தொடர்பான புகார்களுக்கு சிறப்பு செலவின பார்வையாளர்களான மது மகாஜனை - 9444376337 என்ற எண்ணிலும், பி.ஆர்.பாலகிருஷ்ணனை - 9444376347 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘வலிமை’ என்ற தலைப்பில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், ‘ஜனநாயகத்தின் வலிமை ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது, 100% ஒட்டு இந்தியர்களின் பெருமை’ என்று அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வினிதா

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

புதன் 10 மா 2021