மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 மா 2021

கிச்சன் கீர்த்தனா: மீன் சாப்ஸ்!

கிச்சன் கீர்த்தனா: மீன் சாப்ஸ்!

பலரின் நாக்குடன் சேர்த்து மனதையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது மீனின் ருசி. இறைச்சியை விரும்பாத அசைவப் பிரியர்கள்கூட மீனை விரும்பக் காரணம் அதில் உள்ள தனிப்பட்ட சுவைதான். ஒரு தட்டில் சுடச்சுடச் சாதத்துடன் சூடான குழம்பும் அதற்குத் தொட்டுக்கொள்ள இரண்டு வறுத்த மீன் துண்டுகளும் இருந்தால்போதும்... அதற்கு இந்த மீன் சாப்ஸ் உதவும்.

என்ன தேவை?

மீன் - கால் கிலோ

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

இஞ்சி - பூண்டு விழுது – அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - ஒன்று

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் –அரை டீஸ்பூன்

மல்லித்தூள் – ஒரு டீஸ்பூன்

தேங்காய்ப்பால் - அரை கப்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

மீனைச் சுத்தம் செய்து லேசாக வேகவைத்து முட்களை எடுத்துவிட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து விரும்பிய வடிவில் புரட்டிவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து மசியும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு வதங்கியதும், புரட்டிய மீனை சேர்த்து சிறு தீயில் வைக்கவும். மீன் வெந்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து, எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

புதன் 10 மா 2021