மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

தேர்தலுக்கு தடை : அவசர மனு தள்ளுபடி!

தேர்தலுக்கு தடை : அவசர மனு தள்ளுபடி!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ”தமிழகம், கேரளா, புதுச்சேரி,மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதம் இருக்கும் முன்பே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், சட்டப்பேரவை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், அரசமைப்புச் சட்டம் 74-வது பிரிவின்படி, பிரதமரும், அமைச்சர்களும் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர்.

இவர்கள் நாட்டு மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். எனவே தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் பங்கேற்பதற்கு தடை விதிக்க வேண்டும். ‘மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் என்பது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14 பிரிவு 21 ஆகியவற்றுக்கு எதிராக இருக்கிறது. அதனால், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவதற்கு ம், தேர்தல் பிரச்சாரத்தில் மதரீதியான கோஷங்கள் எழுப்புவதற்கும் தடை விதிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக முதலில் தேர்தல் ஆணையம் அல்லது சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள் , தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் செய்துள்ள நிலையில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி நீதிபதி அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது.

வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

செவ்வாய் 9 மா 2021