மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

தேர்தல் அறிக்கைகளை கவனிக்க உத்தரவு!

தேர்தல் அறிக்கைகளை கவனிக்க உத்தரவு!

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா என ஆராய்ந்து உடனடியாக உத்தரவுகளை பிறப்பிக்கக் கோரிய மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதால், ஒவ்வொரு கட்சிகளும் மக்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதி அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவை கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ”தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வெளியிடுகின்ற தேர்தல் அறிக்கைகள் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா என ஆராய்ந்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென 2013 ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த தேர்தல் அறிக்கைகள் மீது 2016 ஆகஸ்ட் மாதம்தான் தேர்தல் ஆணையம் உத்தரவுகள் பிறப்பித்தது. தற்போது, கால தாமதம் செய்யாமல் உடனடியாக உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மார்ச் 15 ஆம் தேதிக்குள் இந்த மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தது.

வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

செவ்வாய் 9 மா 2021