மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு தடை இல்லை!

வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு தடை இல்லை!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ”அரசியல் லாபத்திற்காக, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் தற்காலிகமானதுதான், ஆறு மாதத்திற்கு பிறகு சாதி வாரி கணக்கெடுப்புகள் கிடைத்த பிறகு மாற்றியமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல், எம்.பி.சி வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 10.5 சதவீதத்தை வன்னியர்களுக்கு கொடுத்தால் மற்ற சாதியினருக்கு பாதிப்பு ஏற்படும். அதனால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை இன்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், உரிய நடைமுறைகளை பின்பற்றியே சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றும், தேர்தல் ஆதாயத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இதையடுத்து, போதுமான ஆதாரங்கள் இல்லாமல் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு 8 வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.

வினிதா

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

செவ்வாய் 9 மா 2021