மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

ரிலாக்ஸ் டைம்: எலுமிச்சை கொத்தமல்லி சூப்!

ரிலாக்ஸ் டைம்: எலுமிச்சை கொத்தமல்லி சூப்!

எல்லா காலங்களிலும் கிடைக்கும் பொருட்களில் எலுமிச்சையும் கொத்தமல்லியும் உண்டு. வெயில் காலம் தொடங்கிவிட்ட தற்போதைய சூழலில் டீ, காபிக்குப் பதிலாக ரிலாக்ஸ் டைமில் இந்த சூப் செய்து அருந்தலாம். நாள் முழுக்க புத்துணர்ச்சிப் பெறலம்.

எப்படிச் செய்வது?

கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு துண்டு, பூண்டு நான்கு பற்கள் மற்றும் ஒரு பச்சை மிளகாயைச் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் ஒரு கட்டு வெங்காயத்தாளின் வெள்ளைப்பகுதியைச் சேர்த்து வதக்கி பின்னர் நறுக்கிய கேரட் கால் கப், மஷ்ரூம் ஒரு கப் சேர்த்து நன்கு வதக்கி, தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு காரத்துக்கேற்ப மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து காய்கறி வேகும்வரை மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து எலுமிச்சைச்சாறு இரண்டு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி அரை கப் சேர்த்து ஒரு கொதிவந்ததும் வெங்காயத்தாளைச் சேர்த்து அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

சிறப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

செவ்வாய் 9 மா 2021