மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

வாக்காளர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தாத சின்னம்!

வாக்காளர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தாத சின்னம்!

வாக்காளர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தாமல், வேறுபடுத்தி அடையாளம் காணும் வகையில் தேர்தலில் வேட்பாளர்களுக்குத் தனித்துவமான சின்னங்களை ஒதுக்க சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், தேர்தல் ஆணையத்தால் 1997ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட எங்கள் கட்சி உள்ளாட்சி, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது. தேர்தல்ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்பட்ட எங்களது கட்சிக்கு கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கப்பட்டது.

வருகிற சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதால், எங்கள் கட்சிக்கு பொது சின்னமாக தொலைகாட்சி சின்னத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டும். மேலும், தொலைகாட்சி போன்று ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்ட குளிர்சாதனப்பெட்டி, கரும்பலகை, தீப்பெட்டி போன்ற சின்னங்களும் பொது சின்னத்தில் இருக்கிறது. அதனால், மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரே மாதிரியான சின்னங்களை பொது சின்னத்திலிருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தாத வகையில், மற்ற சின்னங்களிலிருந்து வேறுபடுத்தி, எளிதில் அடையாளம் காணும் வகையில் வேட்பாளர்களுக்குத் தனித்துவமான சின்னங்களை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும், பொதுசின்னம் ஒதுக்கக் கோரிய மனுவை 7 நாட்களுக்குள் பரீசிலித்து தகுந்த உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

வினிதா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

செவ்வாய் 9 மா 2021