மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

சென்னைக்கு வருகிறார் ஜனாதிபதி!

சென்னைக்கு வருகிறார் ஜனாதிபதி!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று (மார்ச் 9) தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

இன்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் ஜனாதிபதி, விமான நிலையத்தில் வரவேற்பை முடித்துக்கொண்டு காரில் சென்னை கவா்னா் மாளிகைக்குச் சென்று தங்குகிறார்.

நாளை (மார்ச் 10) காலை கவா்னா் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் வேலூா் புறப்பட்டு செல்கிறார். வேலூரில் உள்ள பொற்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

அதன்பின் தனியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஒரு விழாவில் கலந்துகொள்கிறார். மாலையில் வேலூரில் இருந்து ஹெலிகாப்டரில் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்து, காரில் கவா்னா் மாளிகைக்குச் சென்று தங்குகிறார்.

11ஆம் தேதி (வியாழக்கிழமை) சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்துகொள்கிறார். அதன் பிறகு பிற்பகலில் சென்னையில் இருந்து தனி விமானத்தில் மீண்டும் டெல்லிக்குப் புறப்பட்டு செல்கிறார்.

ஜனாதிபதி வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகள் சென்னை வந்துள்ளனா். அவர்கள், சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதியின் தனி விமானம் மற்றும் ஹெலிகாப்டா் வந்து இறங்கும் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனா்.

அதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதியின் மூன்று நாட்கள் பயணத்தின்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஜனாதிபதியின் பாதுகாப்புப் படை உயரதிகாரிகள், சென்னை மாநகர போலீஸ் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான நிலைய அதிகாரிகள், முக்கிய பிரமுகா்களின் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ஜனாதிபதி வருகையையொட்டி நேற்று (மார்ச் 8) இரவு முதல் சென்னை கிண்டி ராஜ்பவனில் இருந்து விமான நிலைய பகுதி வரை பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வருகிற 11ஆம் தேதி மாலை வரை இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

செவ்வாய் 9 மா 2021