மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

பெண்களுக்கான சிறப்பு வலைதளம் தொடக்கம்!

பெண்களுக்கான சிறப்பு வலைதளம் தொடக்கம்!

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ரிலையன்ஸ் பவுன்டேஷன் தலைவர் நீட்டா முகேஷ் அம்பானி பெண்களுக்கென பிரத்யேகமாக Her Circle எனும் சமூக வலைதளத்தை நேற்று (மார்ச் 8) தொடங்கியுள்ளார். இது பெண்களுக்கு அதிகாரம், மகிழ்ச்சி, ஒத்துழைப்பு மற்றும் ஊக்கம் அளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்த தளம் இந்திய பயனர்களைக் கருத்தில்கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. எனினும், இதைப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பயன்படுத்தலாம் என ரிலையன்ஸ் பவுன்டேஷன் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய Her Circle வலைதளம் அனைத்து வகையான பின்னணியில் இருந்துவரும் பெண்களுக்கு அவர்களின் கனவு, லட்சியம் மற்றும் சிக்கல் நிறைந்த சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது.

இது வலைதளம், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஜியோ ஆப் ஸ்டோர்களில் செயலி வடிவிலும் கிடைக்கிறது. தற்போது இந்த சேவை ஐஒஎஸ் தளத்தில் கிடைக்கவில்லை. இந்தத் தளம் மூலம் உருவாக்கப்படும் தரவுகள் அனைத்தையும் அனைவரும் பார்க்க முடியும். எனினும், இந்தத் தளத்தின் சமூக வலைதளப் பிரிவு பெண்கள் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Her Circle தளத்தில் வீடியோக்கள், புகைப்படங்கள், கட்டுரைகள் மற்றும் பல்வேறு இதர தரவுகள் கிடைக்கின்றன. இவை அனைத்தும் ஆரோக்கியம், வர்த்தகம், பணி, சமூக சேவை, அழகு, பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு பிரிவுகளில் கிடைக்கின்றன. இதில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களும் பங்கேற்க முடியும் என்று தெரிகிறது.

-ராஜ்

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

செவ்வாய் 9 மா 2021