மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

கிச்சன் கீர்த்தனா: நெத்திலி குழம்பு!

கிச்சன் கீர்த்தனா: நெத்திலி குழம்பு!

சிலருக்கு மீன் உணவுகளைப் பார்க்கும்போது மட்டுமல்ல, மீனைப் பற்றிப் பேசினாலே நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிடும். வாரத்தில் இரண்டு நாட்களாவது உணவில் மீன்களைச் சேர்த்துக்கொள்வது அவசியம். அதிலும் குறிப்பாக ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ள மீன்கள் உணவில் தவறாமல் இடம்பிடிப்பது நலம். இன்று நெத்திலி குழம்பு வைத்து குடும்பத்தினர் விருப்பத்தையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துங்கள்.

என்ன தேவை?

நெத்திலி மீன் - அரை கிலோ

கடுகு, வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

சாம்பார் வெங்காயம் - ஆறு

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு

அரைக்க

பச்சை மிளகாய் - இரண்டு

தேங்காய்த்துருவல் - அரை கப்

சோம்பு - அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

கடாயில் தேங்காய் எண்ணெயைக் காயவைத்து கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீன், உப்பு போட்டு கொதிக்க விடவும். மீன் வெந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும்.

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

செவ்வாய் 9 மா 2021