மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 மா 2021

சைகை மொழியில் தேர்தல் செய்திகள்!

சைகை மொழியில் தேர்தல் செய்திகள்!

நாட்டில் 100 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற ஏதுவாக இனி சைகை மொழியிலும் தேர்தல் செய்திகள் வெளியாகும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால், அதுகுறித்தான அறிவிப்புகளும், ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, நூறு சதவீத வாக்குப்பதிவை செயல்படுத்தும் நோக்கில் இனி சைகை மொழியிலும் தேர்தல் செய்திகள் வெளியாகும் என கூறினார். அப்போது, அறிவிக்கப்படும் தேர்தல் குறித்த செய்திகள் அனைத்தும் சைகை மொழியில் பேசும் நபர் மூலம் உடனுக்குடனாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய தலைமை தேர்தல் அதிகாரி, இதன்மூலம் செவித்திறன் குறைபாடுடையோர், வாய் பேச முடியாதவர்கள் தேர்தல் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளலாம். இதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் செவித்திறன் குறைபாடுடையோர், வாய் பேச முடியாதவர்கள் வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்த முடியும்.

வேட்பு மனுதாக்கல் 12 ஆம் தேதி தொடங்கி, 19ஆம் தேதி முடிவடைகிறது. சனி, ஞாயிற்று கிழமைகளில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாததால் 6 நாட்கள் மட்டுமே மனுதாக்கல் செய்ய அவகாசம் உள்ளது. வேட்புமனுவை தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில், தேர்தல் தொடர்பான புகார்களை கையாள்வதற்கு 25 நபர்கள் எந்நேரமும் வேலை செய்வார்கள். புகார்கள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வாக்காளர் அடையாள அட்டை தவிர தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள 11 வகையான ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம். வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறை வழங்கப்படும். கொரோனா நோயாளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில், முழு உடல் கவச உடை அணிந்து வாக்களிக்க வரவேண்டும். கொரோனா காலம் என்பதால் மின்னணு இயந்திரத்தின் வழியாக தொற்று பரவாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரை சந்தித்து தேர்தல் நடைமுறைகள் குறித்து விளக்கவுள்ளோம்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை செய்தித்தாள், ஊடகங்கள், அரசியல் கட்சியின் வலைத்தளங்களில் உரிய முறையில் விளம்பரம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

திங்கள் 8 மா 2021