மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

இரண்டு ஆண்டுகளில் 313 சிங்கங்கள் உயிரிழப்பு!

இரண்டு ஆண்டுகளில் 313 சிங்கங்கள் உயிரிழப்பு!

குஜராத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 313 சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாக குஜராத் வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் வெள்ளிக்கிழமை நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ விர்ஜி தும்மர், கடந்த ஆண்டுகளில் எத்தனை சிங்கங்கள் உயிரிழந்துள்ளன, அதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த வனத்துறை அமைச்சர் கன்பத் வாசவா, கடந்த இரண்டு ஆண்டுகளில் 313 சிங்கங்கள் உயிரிழந்துள்ளன. மேலும், 2019ஆம் ஆண்டில் 154 சிங்கங்களும், 2020ஆம் ஆண்டில் 159 சிங்கங்களும் உயிரிழந்தன. அவற்றில், 90 பெண் சிங்கங்கள், 71 ஆண் சிங்கங்கள், 23 சிங்கக் குட்டிகள் உள்ளடங்கும். திறந்த நிலையில் இருக்கும் கிணறுகளில் தவறி விழுவது, வாகனங்களில் அடிபடுவது போன்ற இயற்கைக்கு மாறான மரணங்களால் 23 சிங்கங்கள் உயிரிழந்தன எனக் கூறினார்.

வனத்துறையால் வழங்கப்பட்ட இறைச்சியை சாப்பிட்ட சிங்கங்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தும்மர் கூறியதை அடுத்து, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும்,கிர் சரணலாயத்துக்கு அருகிலுள்ள 43,000 கிணறுகளை சுற்றி மிகப்பெரிய சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளின் விளைவாக, 2015இல் 523ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை தற்போது 674ஆக அதிகரித்துள்ளது. அதாவது, 29 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கிர் சரணலாயத்துக்குப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ரூ.108 கோடி வழங்கியது எனத் தெரிவித்தார்.

வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

ஞாயிறு 7 மா 2021