மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

பிளாட்பாரம் டிக்கெட் கட்டண உயர்வு ஏன்?

பிளாட்பாரம் டிக்கெட் கட்டண உயர்வு ஏன்?

ரயில்வே நிலையங்களில் 10 ரூபாய் என்று இருந்த பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் சமீபத்தில் ரூ.50 வரை உயர்த்தப்பட்டது. குறுகிய தூர ரயில்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் இந்த பிளாட்பாரம் கட்டண உயர்வும் அமைந்திருந்தது, ரயில் பயணிகளையும் வழியனுப்ப வருபவர்களையும் பெரிதும் பாதித்தது.

இந்த நிலையில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதன் காரணத்தை ரயில்வே துறை விளக்கியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தற்போதைய கொரோனா தொற்று காலத்தில் கூட்டத்தைத் தவிர்க்கும்வகையில் சில ரயில்வே நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதிக கூட்டம் காணப்படும் குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் மட்டும் இது அமல்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக, மும்பை கோட்டத்தில் உள்ள 78 ரயில் நிலையங்களில் ஏழு ரயில் நிலையங்களில் மட்டும் பிளாட்பாரம் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

பிளாட்பாரம் கட்டணத்தை உயர்த்துவதற்கான அதிகாரம், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அந்தந்த கோட்ட ரயில்வே மேலாளர்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறது. குறுகிய காலத்துக்கு பிளாட்பாரம் கட்டணத்தை உயர்த்தும் நடைமுறை புதிதல்ல, அது ஏற்கனவே பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கிறது.

ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட காலத்துக்கு கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முறையாக அது இருக்கிறது. இதற்கு முன்பும், பல விழாக்காலங்களில் பிளாட்பாரம் கட்டணம் அதிகமாக விதிக்கப்பட்டு, பின்னர் அது படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த முறை, கொரோனா பரவல் காரணமாக மக்கள் நலத்தைக் கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்குக்குப் பின் இது அமல்படுத்தப்பட்டது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தக் கட்டணத் தொகை எப்போது குறையும் என்று விளக்கம் தரப்படாதது பொதுமக்களிடையே ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

- ராஜ்

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

ஞாயிறு 7 மா 2021