மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

தேர்தல் நடத்தை விதிமீறல்: 24 வழக்குகள்!

தேர்தல் நடத்தை விதிமீறல்: 24 வழக்குகள்!

சென்னையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மற்றொரு பக்கம், பரிசுபொருட்கள் வழங்கல், மக்களுக்கு பணபட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னையில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் இன்று காலை வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணம், விலை உயர்ந்த பொருட்களை கொண்டு சென்றதாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் உரிமம் பெற்ற 1538 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 9 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 1,089 ரவுடிகளிடம் பிரமாண பத்திரத்தில் 6 மாதம் எந்தவிதமான குற்றங்களிலும் ஈடுபட மாட்டோம் என கையெழுத்து பெற்றுள்ளதாகவும் தேர்தல் பிரிவின் சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வினிதா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 7 மா 2021