மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

லலிதா ஜூவல்லரி: கணக்கில் வராத ரூ.1000 கோடி!

லலிதா ஜூவல்லரி: கணக்கில் வராத ரூ.1000 கோடி!

தமிழகம் உட்படத் தென்னிந்தியாவின் பிரபல நகைக்கடையான  லலிதா ஜூவல்லரி நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், 1000 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாதது தெரியவந்துள்ளது.

லலிதா ஜூவல்லரி நகைக்கடைக்குச் சொந்தமான இடங்களில், கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் வருமான வரி சோதனை நடைபெற்றது.  சென்னை, மதுரை, நெல்லை,  திருச்சி, மும்பை, ஜெய்ப்பூர் என 27 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில், 27 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 1000 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாதது தெரியவந்தது என்றும், 1.2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க வியாபாரத்தில் கணக்கில்  காட்டப்படாத பணம். பழைய நகையை வாங்கி புதிதாக மாற்றும்போது சேதாரம் என்று பலகோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் பண மதிப்பழிப்பு நடவடிக்கையின்போது அதிகளவில், அதாவது விளக்கம் சொல்ல முடியாத அளவுக்கு பரிவர்த்தனை செய்ததும்  சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், பொருளை வாங்குவதற்கு முன் பணம் கொடுப்பது போல போலி கணக்குகளுக்குப்  பணம் அனுப்பப்பட்டிருப்பதும், தனது கிளைகளிலிருந்து கடன் வாங்கியதைப் போலப் பொய்க் கணக்குக் காட்டியிருப்பதும், ரியல் எஸ்டேட் துறையில் ரொக்கம் முதலீடு செய்யப்பட்டிருந்ததும், கணக்கில் வராமல் தங்கம் பெருமளவில் வாங்கப்பட்டிருந்ததும்,  உள்ளூர் பைனான்சியரிடம் கொடுக்கல் வாங்கல் நடைபெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-பிரியா

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

ஞாயிறு 7 மா 2021