மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

தேயிலைத் தோட்டத்தில் இறந்துகிடந்த சிறுத்தை: விஷம்வைத்து கொல்லப்பட்டதா?

தேயிலைத் தோட்டத்தில் இறந்துகிடந்த சிறுத்தை: விஷம்வைத்து கொல்லப்பட்டதா?

கோத்தகிரி அருகிலுள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் மர்மமான முறையில் பெண் சிறுத்தை ஒன்று இறந்துகிடந்த நிலையில், அது விஷம்வைத்து கொல்லப்பட்டதா எனச் சூழலியாளர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகிலுள்ளது புடியங்கி கிராமத்தின் அருகிலுள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்துகிடப்பதை ஊர் மக்கள் சிலர் கண்டனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

நிகழ்விடத்துக்கு வந்த வனத்துறையினர், சிறுத்தை இறந்திருப்பதை உறுதி செய்தனர். உடனே தங்களின் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சிறுத்தையின் உடலை மீட்டு, கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உடற்கூறாய்வை மேற்கொண்டனர். ஆய்வுக்காக சிறுத்தையின் உடல் மாதிரிகளைச் சேகரித்து, பின் உடலை எரியூட்டினர்.

இதுகுறித்து பேசிய வனத்துறையினர், “இந்தப் பகுதி கட்டபெட்டு வனச்சரகத்துக்கு உட்பட்டது. இறந்த சிறுத்தைக்கு ஏழு முதல் எட்டு வயது இருக்கலாம். இது ஒரு பெண் சிறுத்தை. இறந்து ஏழு நாள்களுக்கு மேல் ஆகியிருக்கலாம். உடற்கூறாய்வு அறிக்கையின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறோம்" என்றனர்.

இந்த நிலையில் சூழலியல் செயற்பாட்டாளர் ஜனார்த்தனன் என்பவர், “சமீபகாலமாக தனியார் தேயிலைத் தோட்டங்களில் மர்மமான முறையில் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழப்பது அதிகரித்திருக்கிறது. கிராமப் பகுதிகளில் மக்கள் வளர்த்துவரும் செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகளை சிறுத்தைகள் இரையாக்குவதால், வன உயிர்களை விஷம்வைத்து கொல்லவும் வாய்ப்பு அதிகம் உள்ளது” என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளவர், “இது குறித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

- ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

ஞாயிறு 7 மா 2021