மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

தொடர்ந்து அவமதிக்கப்படும் பெரியார் சிலை!

தொடர்ந்து அவமதிக்கப்படும் பெரியார் சிலை!

கிருஷ்ணகிரி அருகே பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகத்தின் பல பகுதிகளில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது, காவி துண்டு போடுவது, செருப்பு மாலை அணிவிப்பது, குல்லா அணிவிப்பது உள்ளிட்ட பல அவமதிப்பு செயல்கள் நடந்து வந்த நிலையில், தற்போது ஒருபடி மேலே சென்று பெரியார் சிலைக்கு தீ வைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய நெடுஞ்சாலையில், கத்தாழைமேடு அருகேயுள்ள சமத்துவபுரத்தில் தந்தை பெரியாருக்கு மார்பளவு வெண்கல சிலை ஒன்று உள்ளது. இன்று அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர் பெரியார் சிலைக்கு டயர் மாலை அணிவித்து, தீ வைத்துள்ளனர். சிலை எரிந்து கொண்டிருப்பதை பார்த்த மக்கள், உடனடியாக தீயை அணைத்துள்ளனர்.

பெரியார் சிலையை அவமதித்த மர்ம நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பிறகு, மக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து கல்லூரி விரிவுரையாளர் ராஜ் என்பவரை தொடர்புகொண்டு கேட்டபோது, ”பெரியார் சிலைகள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருவதற்கு முக்கியக் காரணம் அவருடைய எதிரிகளின் இயலாமையும், விரக்தியும் தான்.ஒரு பொம்மை அரசாங்கத்தை கையில் வைத்துள்ளார்கள். என்றாலும் நினைத்ததை சாதிக்க முடியாதபடி ஏதோ ஒன்னு இருக்கு. அந்த கோபம் அவங்கள பெரியார் பக்கம் திருப்பி இருக்கு. இன்னொன்னு தமிழகத்தில் இது தேர்தல் காலம். பெரியாரின் சிலைகளை அவமதிக்கும் போது எதிர்வினையாக யாரும் எதாவது செய்தால் அதை வைத்து இந்த தேர்தல்ல குளிர் காயலாம் என்று நினைக்கிறார்கள். ஒரு வகையில் பெரியார் சிலைகள் அவமதிப்பு பெரியாருக்கு ஒரு விளம்பரம்தான். அவரது எழுத்துகளை விரும்பி இளைய சமுதாயம் படித்து வருகிறது. கடந்த புக் ஃபேர்ல கூட அதிகம் விற்றது பெரியார் தொடர்பான புத்தகங்கள் தான். காரணம் அப்படி என்ன தான் பெரியார் செய்தார் என்று நினைச்சு வாசிக்க முன் வருகிறார்கள்.

பெண்கள் பிரச்சினையில் பிரஞ்சு பெண்ணியலாளர் சைமன் டி பீவரின் செகண்ட் செக்ஸ் நூலுக்கு முன்பாக மிகவும் புரட்சிகரமாக சிந்தித்தவர் தந்தை பெரியார். பெண் விடுதலைக்கு பெண்கள் குழந்தை பெறுதல் கூடாது என்றெல்லாம் சொல்ல எவ்வளவு துணிவு இருக்க வேண்டும்! இது ஓர் இளைஞனை,யுவதியை வித்தியாசமாக சிந்திக்க தூண்டுவதாகும்.

இந்த கும்பல் நினைப்பது போல இளைய சமுதாயம் இதை எல்லாம் பார்த்து, பெரியாரை வெறுத்து விட மாட்டார்கள். அது இவர்கள் தங்கள் சித்தாந்த ஓட்டை வழியாக இந்த சமூகத்தை பார்ப்பதாகும். மாறாக பெரியாரை வாசித்தால் ஒரு புது உலகம் விரிகிறது. ஆகவே நமது பதிலடி என்பது அறிவார்த்தமாக இருக்க வேண்டும்” என்கிறார்.

வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

ஞாயிறு 7 மா 2021