மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

ரிலாக்ஸ் டைம்: சிக்கன் நூடுல்ஸ்!

ரிலாக்ஸ் டைம்: சிக்கன் நூடுல்ஸ்!

“இன்னிக்கு சண்டே. ரிலாக்ஸ் டைம்ல ஸ்பெஷலா ஏதாவது செய்மா” என்று கேட்கும் குழந்தைகளுக்கு எளிதாகச் செய்யக்கூடிய இந்த சிக்கன் நூடுல்ஸ் செய்து கொடுங்கள். மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். நாள் முழுக்க உற்சாகத்துடன் வலம்வருவார்கள்.

எப்படிச் செய்வது?

100 கிராம் சிக்கனை நன்றாகச் சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும். தேவையான அளவு வெங்காயத்தாள், 100 கிராம் வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய்களைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அகலமான கடாயில் நீர் ஊற்றி ஒரு மீடியம் சைஸ் பாக்கெட் நூடுல்ஸை போட்டு முக்கால் பாகம் வேக வைத்து கொள்ளவும். ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதில் வேகவைத்த சிக்கன் மற்றும் நூடுல்ஸைச் சேர்க்கவும். பின்னர் ஒரு டேபிள்ஸ்பூன் சோயா சாஸ், ஒரு டேபிள்ஸ்பூன் தக்காளி சாஸ், அரை டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து கடைசியில் சிறிது சர்க்கரை, நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கிளறி இறக்கிப் பரிமாறவும்.

சிறப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

4 நிமிட வாசிப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

3 நிமிட வாசிப்பு

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

ஞாயிறு 7 மா 2021