மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

மீண்டும் வழக்கறிஞர்கள் அறை மூடல்!

மீண்டும் வழக்கறிஞர்கள்  அறை மூடல்!

கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே உயர் நீதிமன்றத்துக்குள் அனுமதி வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள வழக்கறிஞர் அறைகள் 200 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்தன. கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து, மாநில அரசுகளின் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கறிஞர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 60 வயதைக் கடந்தவர்களுக்கும், இணைநோய்கள் கொண்ட 45 வயதைக் கடந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் உள்ள மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் நேரடியாகவும், மற்ற வழக்கறிஞர்கள் காணொலி மூலமாகவும் மட்டும் ஆஜராக வேண்டும்.

மார்ச் 8ஆம் தேதி முதல், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள் தவிர, வேறு யாருக்கும் அனுமதியில்லை. அதனால், வழக்கறிஞர் அறைகள் மூடப்படும் என்பதால் ஆவணங்களை எடுத்துக்கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை வழக்கறிஞர்கள் அறை மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், வழக்கறிஞர்கள் அறைகள் மூடப்படுவதால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். இதைக் கண்டித்து, மார்ச் 8ஆம் தேதி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

ஞாயிறு 7 மா 2021