கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – கீரைக்குழம்பு செம ஈஸி!

public

‘வழக்கமாகக் கீரையில் பொரியல், கடைசல் செய்யாமல், சிலர் கீரைக்குழம்பு வைத்துச் சாப்பிடுகிறார்கள். எப்படி கீரைக்குழம்பு வைப்பது… குழம்பு வைப்பதற்கு ஏற்ற கீரை எது…’ – வாரத்துக்கு இரண்டு மூன்று நாட்கள் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள விரும்பவர்களின் கேள்வி இது. இதோ இதற்கான தீர்வு.

நாம் சாதாரணமாக வைக்கும் குழம்பில் முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, தண்டுக்கீரை (முளைக்கீரை) ஆகியவற்றைப் பயன்படுத்தி வைக்கலாம்.

தண்டுக்கீரை (முளைக்கீரை) – 250 கிராம், துவரம்பருப்பு – 100 கிராம், தக்காளி – 100 கிராம், வெங்காயம் – 100 கிராம், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், சமையல் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம், கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பூண்டுப் பற்கள் – 4, கறிவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயம் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, புளி – சிறிய எலுமிச்சைப்பழம் அளவு, தேவையான அளவு தண்ணீர் பொடியாக நறுக்கிய மல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்.

கீரையைக் களைந்து தண்டுகளில் நார் எடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு குக்கரில் துவரம்பருப்பு, நறுக்கிய தக்காளி, வெங்காயத்தில் பாதி அளவு, மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். இரண்டு விசில் வைத்து குக்கரை இறக்கி அதில் இருக்கும் பருப்புத் தண்ணீரை எடுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். பருப்பை நன்றாகக் கடைந்துகொள்ளவும். மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நாம் எடுத்து வைத்துள்ள பருப்புத் தண்ணீரில் கலந்து வைக்கவும். புளியில் தண்ணீர்விட்டு கால் டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கரைத்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பொரிந்து வந்ததும் மீதமிருக்கும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இத்துடன் காய்ந்த மிளகாய், தட்டி வைத்திருக்கும் பூண்டுப்பற்கள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு, இதில் சுத்தம் செய்து நறுக்கிவைத்துள்ள கீரையைச் சேர்க்கவும். புளிக்கரைசல், பருப்புத்தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.

தண்டுடன் கீரை நன்றாக வெந்ததும் பருப்பு மசியல் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். இதில் சிறிதளவு பெருங்காயம் சேர்க்கவும். சாம்பார் மணத்துடன் கொதித்து வந்ததும் நறுக்கி வைத்துள்ள மல்லித்தழைகளைச் சேர்த்து இறக்கினால், சுவையான கீரைக்குழம்பு ரெடி. இதில் சாம்பார் பொடி சேர்க்கத் தேவையில்லை.

**[நேற்றைய ஸ்பெஷல்: இறால் கோல்டன் ஃப்ரை!](https://www.minnambalam.com/public/2021/03/06/1/prawn-golden-fry)**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *