மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 மா 2021

கொரோனாவை தடுக்காத தடுப்பு ஊசி: ஏன்? எப்படி?

கொரோனாவை தடுக்காத தடுப்பு ஊசி: ஏன்? எப்படி?

இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 1.8 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

45 வயதுக்கு அதிகமான இணை நோய்த்தன்மை உள்ளவர்கள் 2,35,901 பேருக்கும், 60 வயதுக்கு அதிகமான 16,16,920 பயனாளிகளுக்கும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒடிஷா மாநிலம் ரூர்கேலா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையிலும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

71 வயதான இந்த மருத்துவர் முன் களப்பணியாளர் என்ற அடிப்படையில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார். இதையடுத்து கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் டோஸ் போட்டுக்கொண்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 3ஆம் தேதி அவருக்கு அறிகுறி தென்பட்ட நிலையில் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர், "எனக்கு லேசான அறிகுறி ஏற்பட்ட போது முதலில் வயது முதுமை, இதய பிரச்சினையால் ஏற்படும் அறிகுறி என்று நினைத்தேன். இதையடுத்து ஒருவேளை கொரோனா வைரஸ் தொற்றாக இருக்குமோ என்று பரிசோதனை செய்ததில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

நான் புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் போது என்னைச் சுற்றி நோயாளிகளாகத்தான் இருப்பார்கள். அவர்கள் யாரும் கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றுவதில்லை. எனவே புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் போது நோயாளிகளிடம் இருந்து எனக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் " என்று தெரிவித்துள்ளார்.

அவருக்கு இருமல் தவிர வேறு எந்த பிரச்சினையும் இல்லை. தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தொற்று பாதிப்பிலிருந்து விடுபடலாம் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், மக்கள் முக கவசம் அணிவது சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

- பிரியா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

சனி 6 மா 2021