மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 மா 2021

8 மணி நேரத்தில் 3 முறை நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

8 மணி நேரத்தில் 3 முறை நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

நியூசிலாந்தில் கடந்த 8 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அதேசமயம் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் தென் பசிபிக் பகுதியில் 8.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு வசிப்பவர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நியூசிலாந்தில் உள்ள தேசிய அவசரநிலை மேலாண்மை மையம், "கடலோரப் பகுதி மக்கள் வீடுகளில் யாரும் தங்க வேண்டாம், ஆபத்தான சுனாமி அலை ஏற்படலாம்" என்று எச்சரித்துள்ளது.

அதோடு கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை சைரன் ஒலிக்க விடப்பட்டுள்ளது. நியூசிலாந்து கடற்கரையில் இருந்து சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆக்லாந்து பே ஆப் பிலண்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 8 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வடக்கு ஐஸ்லாந்தின் கிழக்கு பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

-பிரியா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வெள்ளி 5 மா 2021