மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 மா 2021

ரிலாக்ஸ் டைம்: வெல்ல சீடை!

ரிலாக்ஸ் டைம்: வெல்ல சீடை!

கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்குப் படைக்கும் உணவுப் பொருட்களில் முக்கிய இடம்பிடிப்பது சீடை வகைகள். இவற்றில் உப்பு சீடை, இனிப்பு சீடை என்று இருவகைகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது வெல்ல சீடை. கிருஷ்ண ஜெயந்தி மட்டுமல்ல... சாதாரண நாட்களிலும் இந்த வெல்ல சீடையைச் செய்துவைத்துக் கொண்டு ரிலாக்ஸ் டைமில் சாப்பிடலாம்.

எப்படிச் செய்வது?

வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அரிசி மாவு, ஒரு டேபிள்ஸ்பூன் வறுத்த உளுந்து மாவு, 25 கிராம் வெண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் ஏலக்காய்ப்பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். மாவு பிசைய தேவையான அளவு தேங்காய்ப்பாலுடன், அரை கப் துருவிய வெல்லத்தை கரைத்து கலந்துவைத்துள்ள மாவில் ஊற்றி பதமாக சப்பாத்தி மாவு போல பிசைந்துகொள்ளவும். சிறு சிறு உருண்டையாக உருட்டி சுத்தமான துணியில் பரப்பி 2-3 மணி நேரம் அப்படியே விட்டு விடவும். (ஈரப்பதத்தை துணி உறிஞ்சு கொள்ளும், வெடிக்காது சீடை) பிறகு வாணலியில் பொரிப்பதற்குத் தேவையான அளவு நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து அடுப்பை பற்றவைத்து, சூடானதும் வாணலி கொள்ளும் அளவுக்கு சீடையைப் போட்டு மொறுமொறுப்பாகப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

சிறப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

5 நிமிட வாசிப்பு

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

5 நிமிட வாசிப்பு

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

வெள்ளி 5 மா 2021