மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 மா 2021

வாக்காளர் சீட்டில் புகைப்படம் இல்லை: தலைமை தேர்தல் அதிகாரி!

வாக்காளர் சீட்டில் புகைப்படம் இல்லை: தலைமை தேர்தல் அதிகாரி!

தமிழகச் சட்டபேரவைத் தேர்தலில் இந்த முறை வாக்காளர் சீட்டில் புகைப்படம் இடம்பெறாது என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக இயங்கி கொண்டிருக்கின்றன. அதுபோன்று, தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புகைப்பட வாக்காளர் சீட்டுக்குப் பதிலாக வாக்காளர் தகவல் சீட்டை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச்சாவடி, வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம், உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்காளர் பதிவு சீட்டில் இம்முறை வாக்காளர் புகைப்படம் இடம்பெறாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு, வாக்காளர் தகவல் சீட்டுகளை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும் என மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

4 நிமிட வாசிப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

3 நிமிட வாசிப்பு

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

வெள்ளி 5 மா 2021