மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 மா 2021

கிச்சன் கீர்த்தனா: இறால் முருங்கைக்கீரைப் பொரியல்

கிச்சன் கீர்த்தனா: இறால் முருங்கைக்கீரைப் பொரியல்

பொதுவாக நன்நீரிலும், உவர்நீரிலும் காணப்படும் நீர்வாழ் உயிரினம் இறால். இது இறால் மீன் எனவும் அழைக்கப்படுகிறது. அனைவராலும் விரும்பி உண்ணப்படும் இறைச்சியாகவும் இறால் விளங்குகிறது. இந்த இறாலுடன் சத்து நிறைந்த முருங்கைக்கீரை சேர்த்து இன்றைய ஸ்பெஷலாக வித்தியாசமான இறால் முருங்கைக்கீரைப் பொரியல் செய்து அசத்தலாம்.

என்ன தேவை?

இறால் - 100 கிராம் (சுத்தம் செய்தது)

முருங்கைக்கீரை - ஒரு கப்

சின்ன வெங்காயம் - 15 (நீளவாக்கில் நறுக்கவும்)

காய்ந்த மிளகாய் - 2

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

தேங்காய்த்துருவல் - 5 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், காய்ந்த மிளகாயைக் கிள்ளி போட்டுத் தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் சுத்தம் செய்த இறால் சேர்த்து வதக்கும்போதே முருங்கைக்கீரையும் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, மஞ்சள் தூள் சேர்க்கவும். தேவையான அளவுக்கு தண்ணீர் தெளித்து, 10 நிமிடம் மூடி போட்டு மிதமான தீயில் வைக்கவும். இடையில் மூடியைத் திறந்து, இறால் கலவையை ஒரு முறை புரட்டி விடவும். பிறகு நன்கு வெந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கினால், இறால் கீரைப் பொரியல் தயார்.

குறிப்பு

இறாலுடன் சுரைக்காய், கொத்தவரங்காய் சேர்த்தும் இதே போல செய்தால் சுவையாக இருக்கும்.

நேற்றைய ஸ்பெஷல்:இறால் மிளகு வறுவல்

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

வெள்ளி 5 மா 2021