மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 மா 2021

டாஸ்மாக்: ஒருத்தருக்கு இரண்டு ‘புல்’ மட்டும்தான்!

டாஸ்மாக்: ஒருத்தருக்கு இரண்டு ‘புல்’ மட்டும்தான்!

தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் கடைகளில் இனி தினமும் ஒரு நபருக்கு இரண்டு ‘புல்’ மதுபாட்டில்கள் மட்டுமே வழங்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் களைகட்ட தொடங்கிவிட்ட நிலையில் மது குடித்துவிட்டு கும்மாளம் போடுவதைத் தடுக்க இந்த நடவடிக்கையைத் தேர்தல் கமி‌ஷன் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் கமி‌ஷன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இனி தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்குவதற்குக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, டாஸ்மாக் கடைகளில் இனி தினமும் ஒரு நபருக்கு இரண்டு ‘புல்’ மதுபாட்டில்கள் மட்டுமே வழங்கப்படும். அதற்கு மேல் கிடையாது. புல் மதுபாட்டில்கள் கிடைக்கவில்லை என்றால் நான்கு ‘ஆப்’ மதுபாட்டில்களை வாங்கிக்கொள்ளலாம். அதுவும் கிடைக்கவில்லை என்றால் எட்டு ‘குவாட்டர்’ மதுபாட்டில்களை வாங்கிக்கொள்ளலாம்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் உள்ள அனைத்து விற்பனையாளர்களுக்கும் இதுதொடர்பான தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருப்பதாக டாஸ்மாக் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

-ராஜ்

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

வியாழன் 4 மா 2021