மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 மா 2021

தேர்தல் வரை விடுமுறை கிடையாது: காவல் துறை உத்தரவு

தேர்தல் வரை விடுமுறை கிடையாது: காவல் துறை உத்தரவு

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி போலீஸாருக்கு விடுமுறை கிடையாது என டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல், ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. ஒரே நேரத்தில் பல்வேறு கட்சி தொண்டர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுவதால் சட்டம் - ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையை அதிகரிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மேலும், தொகுதி உடன்பாடுகள் முடிந்து அரசியல் கட்சியினர் தேர்தல் பணியை ஆரம்பிக்க உள்ள நிலையில், உள்ளூர் போலீஸார் பாதுகாப்பு நடவடிக்கையை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கேற்ப போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக போலீஸார், 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஒரு லட்சம் போலீஸார் ஈடுபட உள்ளனர். அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிக்கும் வகையில் தமிழக போலீஸ் டிஜிபி திரிபாதி பாதுகாப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். இதையொட்டி போலீஸாருக்கு விடுமுறை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான சுற்றறிக்கை டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

வியாழன் 4 மா 2021