மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 மா 2021

ஒரு கிலோ கேக்குக்கு ஒரு லிட்டர் பெட்ரோல்!

ஒரு கிலோ கேக்குக்கு ஒரு லிட்டர் பெட்ரோல்!

திருச்சியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பேக்கரி கடை வாடிக்கையாளர்களை கவரும் வகையில், ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள ஹீபர் ரோட்டில் கேக் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் பேக்கரி புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இங்கு பலவகையான கேக்குகள் தயாரிக்கபட்டு விற்பனை செய்யப்படுகிறது. கேக்குகள் 600 ரூபாயிலிருந்து 1200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த பேக்கரியில் ஒரு கிலோ கேக் வாங்கினால், ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கடை உரிமையாளர் சகாயராஜ் கூறுகையில், ”இன்றைய சூழ்நிலையில், மற்ற இலவசங்களை வழங்கினால், மக்களுக்கு அது பெரியளவில் பயனாக இருக்காது என்பதால், பெட்ரோல் இலவசம் அறிவிக்கப்பட்டது. இங்கு கொடுக்கப்படும் பெட்ரோல் கூப்பனை, குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்கில் கொடுத்து, பெட்ரோல் வாங்கிக் கொள்ளலாம். இந்த சலுகை ஒரு மாதம் வரை இருக்கும். பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே இருப்பதால், வாடிக்கையாளர்களிடையே இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன்பு, ஒரு கிலோ கேக் வாங்கினால், ஒரு குடை இலவசம் என்ற அறிவிப்பை அறிவித்திருந்தோம்” என கூறினார்.

சமீப நாட்களாக பெட்ரோல், டீசலின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கின்றது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், கரூர், திண்டுக்கலில் 20 திருக்குறள்களை கூறும் பிள்ளைகளின் பெற்றோருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வியாழன் 4 மா 2021