மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 மா 2021

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமா?

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமா?

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா பாதிப்பு காரணமாக நடப்பு கல்வியாண்டின் பொதுத் தேர்வு தாமதமாக தொடங்குகிறது. வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இந்த ஆண்டு மே 3ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகளுக்கு நடைபெற்றதாலும், மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ள போதிய பயிற்சி வழங்க முடியாததாலும் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, பொதுத் தேர்வு நடைபெறும் ஒருநாளுக்கு முன்பாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்களுக்கு தேர்தல் தொடர்பான பணி இருக்கும், வாக்கு எண்ணிக்கைக்கு மறுநாள் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி பொதுத் தேர்வு தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது.

ஆனால், திட்டமிட்டபடி மே 3ஆம் தேதி பொதுத் தேர்வு நடைபெறும் என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பணியில் ஆசிரியர்களின் பங்கு பெரிய அளவில் இல்லை என்றும், கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் தேர்வு மையங்களுக்குப் பாதிப்பு இல்லை என்பதால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மே 3ஆம் தேதி தொடங்கும் என்று தேர்வுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வியாழன் 4 மா 2021